ரஜினி மருத்துவமனையில் அனுமதி! தள்ளி செல்கிறதா 'வேட்டையன்" ரிலீஸ்?

வேட்டையன் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு சென்சார் சான்றிதழுடன் அறிவித்து உறுதி செய்துள்ளது.

vettaiyan

சென்னை :ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், திடிரென உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் கடந்த செப் 30-ஆம் தேதி சென்னை அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நிலை எப்படி இருக்கு?

சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, அடி வயிற்றுக்கு அருகில் அவருக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை தரப்பிலிருந்து ரஜினியின் உடல் நலம் பற்றிய அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ரஜினியின் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளத்திலிருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறை மூலம் வெற்றிகரமாகச் சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது, ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேட்டையன் ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறதா?

திடீரென ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவருடைய படமான வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதா என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால், ரஜினி உடல்நலம் குணம் அடைந்து இன்னும் 2 நாட்களில் வீடு திரும்ப வாய்ப்புள்ளதால் கண்டிப்பாக ரிலீஸ் தேதியைப் படக்குழு தள்ளி வைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கூறப்படுகிறது.

அப்படி ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்கப் படக்குழு முடிவெடுத்து இருந்தால் கண்டிப்பாக, ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்திலே அறிவித்திருப்பார்கள். ஆனால், அதே தினத்தில் படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ் குறித்த அறிவிப்பை வெளியீட்டு படம் திட்டமிட்டபடி அதே தேதியில் வெளியாகும் என்பதை உறுதி செய்தது. எனவே, படம் சொன்ன தேதியில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.