நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தை, ராஜ் கமல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
unknown nodeஇந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
unknown nodeஅதன்படி, இப்படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இன்று அவரின் பிறந்த நாள் என்பதால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are elated to welcome talented performer @Sai_Pallavi92 on board #RKFIProductionNo_51 #HBDSaiPallavi#KamalHaasan #SK21 #RKFI_SPFI @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @RKFI @sonypicsfilmsin @turmericmediaTM pic.twitter.com/ssV71hnkRr
— Raaj Kamal Films International (@RKFI) May 9, 2022