செந்தில் பாலாஜிக்கு 'திடீர்' உடநலக்குறைவு.! மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை: கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம்

Former TN Minister Senthil Balaji

சென்னை:கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் பலகட்ட விசாரணை நடைபெற்று , தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று, பிற்பகல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜிக்கு 'திடீர்' உடநலக்குறைவு.! மருத்துவமனையில் அனுமதி.!