சென்னை அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் சத்யபிரியா.இவருக்கு ஃபேஸ்புக்கில் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்தாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு உள்ளார். அதற்கு லாரன்ஸ் மறுத்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த சத்யபிரியாவின் தந்தை சத்யபிரியா காதலன் லாரன்ஸை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார்.
unknown nodeஇந்த சம்பவத்தை பார்த்து கொண்டு இருந்த சிலர் லாரன்ஸை மீட்டு கே .எம் .சி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் சத்யபிரியா தந்தையை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஃபேஸ்புக் மூலமாக பழகி தன் மகளை ஏமாற்றியதாக சத்யபிரியா தந்தை புகார் தெரிவித்தார்.