புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன் தொடந்த வழக்கு விசராணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் அளிக்கப்பட்டது.அதில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்க போவதில்லை . முறைகேடு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.இனி புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.