கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் கரையைக் கடந்து சேதம் ஏற்படுத்திய கஜா புயல், அரபிக் கடல் நோக்கிச் செல்கிறது.
இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் கோட்டார், செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது.