கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ் காட்சிகளின் மூலம் பிரபலமடைந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் 2021-ல் வெளியான அகண்டாவின் அடுத்த பாகமான இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாலையாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரிலும் அதிரடி மாஸ் காட்சிகள் உள்ளன. ஒரு சூலத்தை கழுத்தில் சுத்த விட்டு குண்டாசுகளை பாலையா செதறவிடும் காட்சி […]
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 5, 2025 அன்று வெளியான இப்படம், விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. குறிப்பாக, கதை மெதுவாக செல்வதும் த்ரிஷா நடித்த கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 300 கோடி […]
தர்மபுரி : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவரது தந்தை உயிரிழந்ததாகவும், அவரது தாய் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தருமபுரி – பாலக்கோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் நிகழ்விடத்திலேயே அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நடிகர் சைன் சாக்கோ மற்றும் அவரது தாய் படுகாயத்துடன் மருத்துவக் […]
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடக மாநிலம் தவிர உலகம் முழுவதும் இன்று வெளியானது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் ஒளிபரப்ப அரசு சிறப்பு அனுமதியை அளித்துள்ளது. இந்த […]
சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு பிறகு இவர்களுடைய கூட்டணி இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் மீது மிகபெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தது. அத்துடன் படத்தில் சிம்புவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் எதிர்பார்ப்பு எங்கையோ சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தை கமல்ஹாசன் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தும் வந்தார். இன்னும் கொஞ்சம் ஒரு படி மேல் சென்று […]
சென்னை : சுப்ரமணியபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முருகன் என்ற மொக்கைச் சாமி (78) மாரடைப்பால் காலமானார். குணச்சித்திர நடிகர் முருகன் , “மொக்கைச் சாமி” என்ற பெயரால் பரவலாக அறியப்பட்டவர், நடிகரின் மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சில தகவல்கள் மாரடைப்பு அல்லது உடல்நலக் குறைவு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. மேலும், இறுதிச் சடங்கு மற்றும் பிற விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
சென்னை : இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் இந்த அனுமதி அறிவிப்பு, ரசிகர்களுக்கு படத்தை வெளியீட்டு நாளில் […]
சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ”தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து. தமிழ் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு உதவியதற்கு தங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறும் இந்த தருணத்தில் தமிழ் திரைப்படங்களுக்கான, தமிழக அரசின் விருதுகள் […]
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கர்நாடகாவில் கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை சுமூகமாக வெளியிட […]
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா இல்லையா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். அவர் பேசிய அந்த நாளில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் […]
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரான தினேஷ் மாஸ்டர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது. ‘லியோ’ திரைப்படத்தில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ஃபைட் மாஸ்டராக மாறியதாகவும் சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள், சங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து, தினேஷ் மாஸ்டருக்கு எதிராக சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து […]
கர்நாடகா : கடந்த மே 24 அன்று சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால், அவர் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், […]
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது. அதேநேரம், மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஷ் ஐயர் சிக்ஸர்களை பறக்கவிட்டு அணிக்கு வலுசேர்த்தார். அவ்வப்போது முக்கிய விக்கெட்டுகளும் பறிபோயின. இந்நிலையில், நாளை நடைபெறும் ஃபைனலில் பஞ்சாப், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னதாக […]
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் (Vikram Sugumaran) மாரடைப்பால் காலமானார். ஜூன் 2, 2025 அன்று, மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாரன், கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் […]
சென்னை : கமல் – சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முத்த மழை’ பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய பாடலின் வீடியோ 3 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்பாடலில் ஒரிஜினல் வெர்ஷனை பாடகி ‘ தீ’ பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தக் லைஃப் இசைவெளியீட்டில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ வைரலானது குறித்து சமீபத்திய பேட்டியில் […]
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா உலகில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ராஜேஷ் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவருடைய உடல் அவர் உயிரோடு இருந்த சமயத்தில் தனக்கு தானே கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் தனது 40ஆவது வயதில் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே கல்லறை கட்டியது, அவரது வாழ்க்கையில் […]
சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக, 2-ம் தேதி இறுதிசடங்கு நடக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமாபுரத்தில் உள்ள ராஜேஷ் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் மோகன், சரவணன், தியாகராஜன், விஷால், சின்னிஜெயந்த், கவிஞர் வைரமுத்து, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்டோர் […]
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த தனித்துவமான தயாரிப்பு, டாக்டர் ஸ்குவாட்ச் என்ற இயற்கை சோப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அவருடைய குளியல் நீரில் உருவான அந்த சோப்க்கு “சிட்னியின் குளியல் நீர் பேரின்பம்” (Sydney’s Bathwater Bliss) என பெயரும் வைக்கப்பட்டுள்ளது. விலை எவ்வளவு? இந்த சோப்பின் விலை ஒரு பட்டையின் மதிப்பு 8 அமெரிக்க டாலர்கள், […]
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே பேசியது கன்னட அமைப்புகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. கமல்ஹாசன் பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் ஆதரவும் பெருகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இது குறித்து […]
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கமல்பேசிய விஷயம் தான் தற்போது அரசியல் வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக வெடித்துள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே கமல்ஹாசன் பேசியிருந்தார். கன்னட […]