இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,321ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,82,778 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,00,82,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,321 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,91,981 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 68,885 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,90,63,740 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,27,057 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 30,16,26,028 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.