அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்ற ஒப்புதல்....!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உலக புகழ்பெற்ற

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உலக புகழ்பெற்ற கும்பமேளா அலகாபாத்தில் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவை ஒட்டி நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத்தொடர்ந்து அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்ய உத்தர பிரதேச அரசு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.