பீகார் :சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் 11) நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளன. காலை 9:30 மணி நிலவரப்படி, என்டிஏ (பாஜக-ஜெடியூ) கூட்டணி 155 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி (ஆர்ஜேடி-காங்கிரஸ்) 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜன் சுராஜ் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, மற்றவை 3 தொகுதிகளில் உள்ளன.இரு கூட்டணிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பாஜக தனியாக 55 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆர்ஜேடி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஜெடியூ 24 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும், இந்தியா கூட்டணியின் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். ஆர்ஜேடி நிறுவனர் லாலு யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஜனசக்தி ஜனதா தளம் (JJD) கட்சி தொடங்கி போட்டியிட்ட மஹுவா தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளார். இது யாதவ் சகோதரர்களின் முன்னிலை என்று கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும் நிலையில், என்டிஏ கூட்டணி 122 தேவைப்படும் பெரும்பான்மையை தாண்டி 155 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 81 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஜன் சுராஜ் கட்சி 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, மற்றவை 3 இடங்களில் உள்ளன. இந்தியா கூட்டணி தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்துக் கணிப்புகளை நிராகரித்து “மாற்றம் வரும்” என்று கூறிய நிலையில், ஆரம்ப நிலவரம் என்டிஏவுக்கு சாதகமாக உள்ளது.
