#BREAKING: மழை பாதிப்பு – புதுச்சேரியில் நிவாரணம் அறிவிப்பு!

Puducherry Chief Minister Rangasamy announces relief for rains and floods

புதுச்சேரியில் மழை, வெள்ளம் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநிலமுதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ள காட்சியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விளை நிலங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மீனவர் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடம் உரிய நிதியை கோருவோம் என்றும் மழையால் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய ரூ.100 கோடிக்கு மேல் டெண்டர் விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.