#BREAKING: டிராக்டர் பேரணி வன்முறை.. காயமடைந்த போலீசாரை சந்தித்த அமித் ஷா..!

Union Home Minister Amit Shah visited the guards who were admitted to the hospital after being injured in the tractor rally violence.

டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணியை தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக மாறியது. பின்னர், விவசாயிகள் செங்கோட்டையை முற்றிகையிட்டனர்.

இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும், டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 394 போலீஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷ நேரில் சென்று சந்தித்தார். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை பலர் மீது FIR பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.