புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.

puducherry rain school leave

புதுச்சேரி:நாளை(நவ.28)புதுச்சேரிமற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று விடுமுறை என நேற்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நாளை ( நவம்பர் 28.11.2024) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையை கருத்தில் கொண்டு கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் உருவான நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை எனவும் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

மேலும், நாளை புதுச்சேரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட்டையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.