" தேவகவுடா இறந்துவிடுவார் " பிஜேபி_யினரை ஓட ஓட விரட்டியடித்த JD(S) தொண்டர்கள்...!!

கர்நாடகா மாநிலத்தில் மதற்சார்பற்ற ஜனதா தளம் JD(S)+காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றது.கர்நாடக மாநில முதல்வராக முன்னாள் பிரதமர் தேவகவுடா_வின் மகன்

கர்நாடகாவில்  JD(S)+காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து பிஜேபி முயற்சி செய்து வருகின்றது.

பாஜக M.L.A பிரீத்தம் கவுடா தேவகவுடா விரைவில் இறந்து விடுவார் என்றது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மதற்சார்பற்ற ஜனதா தளம் JD(S)+காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றது.கர்நாடக மாநில முதல்வராக முன்னாள் பிரதமர் தேவகவுடா_வின் மகன் குமாரசாமி இருக்கின்றார்.இந்த கூட்டணி ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டுமென்று பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.சமீபத்தில் கர்நாடக எடியூரப்பா M.L.A_க்களை பேரம் பேசும் ஆடியோ_வை வெளியிட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் மிகவும் கீழ்த்தனமான செயல்களை செய்து வருகின்றனர்.கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த பாஜக M.L.A பிரீத்தம் கவுடா குமாரசாமி மற்றும் தேவகவுடாவை இழிவாக பேசியுள்ளார்.

சமீபத்தில் பாஜக M.L.A பிரீத்தம் கவுடா பேசியதாக வெளியான ஆடியோ_வில் தேவகவுடா விரைவில் இறந்து விடுவார்.குமாரசாமிக்கு உடல்நிலை சரி இல்லை என்று பேசியது கடும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து  JD(S) தொண்டர்கள் M.L.A பிரீத்தம் கவுடா வீட்டை முற்றுகையிட்டு அங்கு இருந்த பாஜக தொண்டர்களை ஓட ஓட விரட்டியடித்தனர்.

" தேவகவுடா இறந்துவிடுவார் " பிஜேபி_யினரை ஓட ஓட விரட்டியடித்த JD(S) தொண்டர்கள்...!!