சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம்... அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு.!

மன்மோகன் சிங் உடல் இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, யமுனை நதிக்கரையில் முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

Manmohan Singh Passed Away

டெல்லி:உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் காலமானார். தற்பொழுது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள மோதிலால் நேரு தெருவில் அமைந்திருக்கும் மன்மோகன் சிங்கின் வீட்டில் இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலம், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலம் வழியாக நிகாம்போத் காட் பகுதிக்கு செல்கிறது. அங்கு அவரது உடல் முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.

அதற்கு முன்னதாக, காங்கிரஸ் அலுவலகத்தில் உடல் 10 நிமிடங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி அஞ்சலிக்காக காங்கிரஸ் அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.