பின்வாங்கிய கர்நாடக அரசு!மறுஆய்வு மனு தாக்கல் செய்ய தயக்கம் .....

கர்நாடக அரசு, காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை  கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை

கர்நாடக அரசு, காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை  கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லியில் நடக்கும் எம்பிக்கள் கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கர்நாடகத்திற்கு கூடுதலாக 15.75 டிஎம்சி நீரை ஒதுக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக அரசு, இந்த தீர்ப்பை மறுஆய்வு கோரி பெங்களூரு மாநகர குடிநீர் தேவைக்கு காவிரி தண்ணீரை கூடுதலாக ஒதுக்க உத்தரவிடக்கேட்டு  உச்சநீதிமன்றத்தை அணுக போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்து அதன்மூலம் கர்நாடகத்திற்கு பாதகமான தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்று சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியதால் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் திட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்த கர்நாடகம் முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.