ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு விற்பனை செய்ய திட்டம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடல் நீரை சுத்திகரித்து, ஒரு லிட்டர் தண்ணீர் 5 காசுக்கு விற்பனை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இதனை தெரிவித்த அவர்,தமிழ்நாட்டின் தூத்துக்குடியில்இதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
நாடுமுழுவதும் விரைவில் 5 காசுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். சில மாநிலங்கள் நதிநீருக்காக சண்டை போட்டு வருவது துர்தஷ்டவசமானது என கூறிய அவர், பாகிஸ்தானுக்குள் செல்லும் தண்ணீரை பற்றி யாரும் கவலைப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
One liter water for 5 coins sold!