கொரோனா தடுப்பூசி தயாரா? – பிரதமர் மோடி இன்று ஆய்வு.!

Prime Minister Narendra Modi will embark on a three-city visit tomorrow to personally review the coronavirus vaccines development

கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் மேம்பாடு குறித்து 3 இடங்களில் இன்று பிரதமர் மோடிஆய்வு செய்கிறார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி  இன்று மூன்று நகர சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். அந்தவகையில், பிரதமர் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

இந்நிலையில், மோடி ஹக்கீம்பேட்டை விமானப்படை நிலையத்தில் இறங்கி ஹைதராபாத்தில் இருந்து 50 கி.மீ தூரத்தில் ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள பாரத் பயோடெக் வசதிக்குச் முதலில் செல்வார். மேலும், இந்த பயணத்தின் போது கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்புகள், அவற்றின் பாதுகாப்பு, பக்கவிளைவுகள் குறித்து பிரதமர் கேட்டறிவார் என்று தெரிகிறது.

இதனையடுத்து, பிரதமர் தனது வருகையின் போது, கொரோனா தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளுடன் இந்த வசதிகளில் கலந்துரையாடுவார். மக்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்படும் என்பது குறித்த சவால்கள் மற்றும் பாதை வரைபடம் குறித்தும் அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.