ரூ.13,000  கோடி வங்கி மோசடி:லண்டனில் நிரவ் மோடி கைது

This news gives information about Rs 13,000 crore bank fraud: Nirva modi arrested in London

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வங்கி மோசடி விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய நிரவ் மோடி.

இன்று லண்டனில் வைத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் ,அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. , அமலாக்கப்பிரிவு , வருமான வரித்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் லண்டன் அரசின் உதவியை இந்திய அரசு நாடியது.இறுதியாக நிரவ் மோடியை இந்தியாவிற்கு அனுப்ப உதவுவதாக லண்டன் அரசு தெரிவித்தது.

இங்கிலாந்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனம் டெய்லி டெலிகிராப்  வெளியிட்ட  வீடியோவில் நிரவ் மோடியின் சொகுசு வாழ்க்கை வெளியானது.

நிரவ் மோடி லண்டனில் 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பு  உள்ள சொகுசு பங்களாவில் வாழ்ந்து வந்ததாகவும் , அந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்பட்டது.

மேலும் சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவக்கி உள்ளதாகவும் , லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வசித்து வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நிரவ் மோடி சாதாரணமாக தனது சொகுசு பங்களாவில் இருந்து  நாயை கூட்டிக் கொண்டு அருகில்உள்ள  தனது அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் இன்று என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட்டின் பரிந்துரையின்பேரில்  லண்டனில் வைத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார்.