ஜன.1 முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு

By

கொரோனா பரவலுக்கு மத்தியில் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விமான பயணத்துக்கு முன் “RT-PCR” சோதனை அறிக்கையை “Air Suvidha” இணையதளத்தில் பயணிகள் பதிவேற்ற செய்ய வேண்டும் என இந்த 6 நாட்டில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

Dinasuvadu Media @2023