டெல்லி: ரோகிணி நகர் பிரகாஷ் விஹாரில் இயங்கி வரும் CRPF பள்ளி முன்பு இன்று காலை 9.30 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடித்தது வெடிகுண்டா? அல்லது மர்மப்பொருளா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய புலனாய்வுத் துறையினர் டெல்லி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரித்து வரும் நிலையில் சம்பவத்திற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்பொழுது, டெல்லியில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பான CCTV வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeவீடியோவில், மர்ம பொருள் வெடிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு கூட சிலர் அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். பத்து நொடிகளுக்கு குறைவாக கூட ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்கின்றார். ஆனால், நூலிழையில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.
