திருமண நாளன்று கீழே விழுந்த மணப்பெண் – மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்!

In Uttar Pradesh, on the day of the wedding, the bride fell down and broke her spine, The bridegroom is holding the bride.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் நடைபெறும் அன்று மணப்பெண் கீழே விழுந்து முதுகு எலும்பு உடைந்ததால் மருத்துவமனையில் வைத்து மணப் பெண்ணை கரம் பிடித்துள்ளார் மணமகன்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமண நாள் அன்று வீட்டின் கூரையிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் மணப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் மணமகன் விருப்பத்திற்கிணங்க இரு குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்று இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனக்கு முதுகெலும்பு உடைந்து விட்டதால் எனது கணவர் என்னை விட்டு சென்று விடுவாரோ என்று நான் பயந்தேன். ஆனால் என் கணவர் என்னிடம் சொன்னார் நீ குணம் அடையவில்லை என்றாலும் உனக்காக நான் இருப்பேன் என கூறினார். அது எனக்கு ஆறுதலாக இருந்தது என தெரிவித்துள்ளார்.