கேரளாவின் பெயர் இனிமேல் இது தான்...பெயரை மாற்ற ஒன்றிய அரசு ஒப்புதல்!

கேரளா என்ற பெயரை 'கேரளம்' என மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.

kerala

கேரளா :கேரளா மாநிலத்தின் பெயர் இனி “கேரளம்” என்று மாற்றப்பட உள்ளது. ஒன்றிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கேரள அரசு 20 மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய தீர்மானத்திற்கு இப்போது ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளா என்ற பெயரை “கேரளம்” என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கேரள மாநிலத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மலையாள மொழியில் இயல்பாக “கேரளம்” என்றே அழைக்கப்படும் இந்த பெயர், ஆங்கிலத்தில் “Kerala” என்று எழுதப்படுவதால் ஏற்படும் உச்சரிப்பு வேறுபாட்டை சரிசெய்யும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

இது மாநிலத்தின் மொழி பெருமையை வலியுறுத்தும் முக்கிய முடிவாக கருதப்படுகிறது.பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள அரசு 20 மாதங்களுக்கு முன்பே இந்த தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த நிலையில், தற்போது ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மாற்றம் முறையாக அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு சட்டப்பூர்வமாக அமலுக்கு வரும். “கேரளா” என்ற பெயர் இனி “கேரளம்” என்று மாற்றப்படுவது மொழி, கலாச்சார பெருமையை முன்னிலைப்படுத்தும் முடிவாக அமைந்துள்ளது. ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் அறிவிப்பு கேரள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.