Viral video: வேறொரு பெண்ணுடன் காரில் சென்ற கணவன்..கார் மீது ஏறி கூச்சலிட்ட மனைவி.!

மும்பையில் உள்ள பெடார் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு தம்பதியினரிடையே ஏற்பட்ட மோதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மும்பையில் உள்ள பெடார் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு தம்பதியினரிடையே ஏற்பட்ட மோதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் காரில் சென்றதை அறிந்த மனைவி அந்த காரை  தொறத்தி தனது வெள்ளை காரில் சென்று தடுத்து நிறுத்திய பெண்   அலறிக் கொண்டு கார் ஜன்னலிலிருந்து கணவரின் கையை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து அடிக்க தொடங்கினார்.

பின்னர் சத்தமாக கூச்சலிட்டு கருப்பு கார் மீது ஏறி தனது செருப்பை கொண்டு கண்ணாடியை தாக்க தொடங்கினர், பின்னர் அந்த பெண் கிளே இறங்கி கூறுகையில், என் காரில் ஏறவும் என்று சத்தமாக கத்தி கொண்டு சொன்னார், கேக்காத கணவன் காரை மீண்டும் இயக்க சென்றார்.

இந்த நேரத்தில், சாலையில் ஒரு கூட்டம் கூடத் தொடங்கி அந்த பெண்மணி தொடர்ந்து அவரது கணவனை நோக்கி கத்திக் கொண்டிருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

நகர்ந்து சென்ற காரை துரத்தி சென்ற சிக்னலில் மடக்கிப் பிடித்த மனைவி கணவனுடன் காரில் சென்ற பெண்ணை கீழே இறக்கி தாக்கியதாகவும் இதையடுத்து தனித் தனி வாகனத்தில் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று  சமரசம் செய்தாக போலீசார் தெரிவித்தனர்

தற்போது சமூகவலையத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node