ஜம்மு காஷ்மீர் கொடியுடன் , தேசிய கொடி பறந்தது !

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த   மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த   மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும்  யூனியன் பிரதேசமாக மாற்றப்ப்படும்  என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு இரு அவையிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவிற்கு இரு அவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்றது.  மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் ,  எதிராக 61 வாக்குகளும் பதிவாகியது.

மக்களவையில் இந்த  மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும் , எதிராக 72 வாக்குகளும் வாக்களித்தனர். இறுதியாக இந்த மசோதா  மக்களவையிலும் , மாநிலங்களவைலும் இரண்டிலும்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில்  உள்ள தலைமை செயலகத்தில் ஜம்மு காஷ்மீர்  கொடியுடன் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை தொடந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது.