தூத்துக்குடி :மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19, 2025) மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த திருத்தப் பணிகளின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,62,527 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் இறந்த வாக்காளர்கள் 57,192 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 39,723 பேர், குடிபெயர்ந்தவர்கள் 58,889 பேர் மற்றும் இரட்டைப் பதிவு செய்தவர்கள் 6,619 பேர் ஆகியோர் அடங்குவர்.
தற்போது மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள்:
ஆண் வாக்காளர்கள் 6,49,224 பேர், பெண் வாக்காளர்கள் 6,78,752 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 182 பேர் என மொத்தம் 13,28,158 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வரைவு பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttp://electoralsearch.eci.gov.inஅல்லதுvoters.eci.gov.inஎன்ற தளத்தில் தேடி அறிந்து கொள்ளலாம். பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது தவறுகள் இருந்தால், படிவம் 6 மூலம் பெயர் சேர்க்க அல்லது ஆட்சேபனை தெரிவிக்க ஜனவரி 18, 2026 வரை வாய்ப்பு உள்ளது.
