18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ...!மேல்முறையீடு செய்தால் எங்கள் வழக்கை விரைந்து விசாரிப்பார்களா..! தங்கதமிழ்ச்செல்வன் சந்தேகம்

மேல்முறையீடு செய்தால் எங்கள் வழக்கை விரைந்து விசாரிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு செய்தால் எங்கள் வழக்கை விரைந்து விசாரிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.

செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

அதேபோல் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 18 பேர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில்  அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் மக்கள் மன்றத்தை சந்திக்க முடிவெடுத்துள்ளோம். மேல்முறையீடு செய்தால் எங்கள் வழக்கை விரைந்து விசாரிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.