போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20% போனஸ் ..! போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் மற்றும் ஊக்கத்தொகை இன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று  போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் மற்றும் ஊக்கத்தொகை இன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று  போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் மற்றும் ஊக்கத்தொகை இன்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை முன்பணம் வழங்கப்படும்.தொழிலாளர்கள் வேலைக்கு வந்து சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.தீபாவளி முன்பணமாக நாளை ரூ.45 கோடி வழங்கப்படும். ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகையாக ரூ.251 கோடி வரும் திங்கட்கிழமை, அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.ஒருவேளை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்கும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும்   போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.