சென்னை :அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொன்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், திமுகவை விமர்சனம் செய்து பேசி வருகிறார். அவருடைய பேச்சுக்கு திமுகை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க மீண்டும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசிக்கொண்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் வழக்கமான ஒரு டாப்பிக்காகவே மாறியுள்ளது.
இப்படியான சூழலில் இன்று எடப்பாடி பழனிசாமி திமுக மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொருளாதார புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான். பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்படாதால், உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர், விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லை. கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர். நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை. எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது.
விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிம்பில் உள்ளனர். தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், திமுக-வின் ரவுடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் திமுக ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில், சாலைகள், நீர்ப் பாசனத் திட்டங்கள் போன்றவையே காரணம் எனவே திமுக பெருமை பீற்றிக் கொள்வதற்கு இதில் எதுவுமே இல்லை. ஆனாலும், தமிழ் நாடு இந்திய அளவில் உள்ள ராணி வளர்ச்சியைவிட, எப்போதுமே அதிக வளர்ச்சி பெற்றுவருகிறது. குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியைப் பெற முடியாது. அதற்கு அடித்தளம் போட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரக, அதனாலேயே தமிழ் நாடு சரிவில்லாமல் வளர்ச்சி பெறுகிறது.
எனவே, பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமா ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் சொன்னால்கூட திமுக ஜால்ராக்கள், நாம் பொறாமையில் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையை மக்களுக்கு உரக்கச் சொல்ல வேண்டியது நமது கடமை” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
unknown node