வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் நடிகர் விஜய்!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய்.

Thalapathy Vijay

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய்.

கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

1000 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் விஜய்.!

அதன்படி, நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் தற்போது நடிகர் விஜய் பங்கேற்று, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 1000 பேருக்கு, அரிசி, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.