சென்னை :நடிகை கஸ்தூரி இன்று (ஆகஸ்ட் 15) சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தார்.
இந்நிகழ்வில், நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்தார். இவர்களின் அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கியிருப்பதை நயினார் நாகேந்திரன் வரவேற்று, இது கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், ”சமூக செயல்பாட்டாளரான திருமதி.கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node