சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தமாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது.
unknown nodeஇந்நிலையில் மதுரை சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த மனுவில் அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் மல்டி பிளக்ஸ் திரையரங்கில் வசூலிப்பதாக தெரிவித்தார்.இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,மதுரையில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் .மேலும் சர்கார் படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.