தங்க தமிழ்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
unknown nodeபின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
unknown nodeபன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
தற்போது தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.
unknown nodeகுறிப்பாக அதிமுக அமைச்சர்கள் குறித்து கருத்து கூறி வருகிறார்.இதற்கு அதிமுக அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,தங்க தமிழ்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் மகிழ்ச்சி.இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். தமிழகத்தில் அம்மா இரு சக்கரம் வாகனம் வழங்குவதில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.