சென்னை : 234 தொகுதிகளிலும் கடைசி நாளில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவித பரப்புரையும் அனுமதிக்கப்படாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் இறுதிக் கட்டத்தில் தங்களது வாக்கு சேகரிப்பை முடித்துக்கொண்டன.முக்கிய தொகுதிகளில் இறுதிப் பரப்புரை:
- கொளத்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
- சிவகாசி: அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஹவுசிங் போர்டில் இருந்து தொடங்கி பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தார். ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் அமைதியான பேரணியாக சென்றனர்.
- விருத்தாச்சலம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
- காரைக்குடி: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
- சென்னை: தவெக தலைவர் விஜய், தனது கட்சி சின்னமான ‘விசில்’ அடித்து வாக்கு சேகரித்தார்.
- பொன்னமராவதி: திருமயம் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ். ரகுபதி, “இந்த ஐந்தாண்டு காலத்தில் திருமயம் தொகுதிக்கு நான் செய்ததைப் போல எவரும் செய்ததில்லை” என்று கூறி வாக்கு சேகரித்தார்.
- திருக்கோயிலூர்: விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக வேட்பாளர் பொன். சிகாமணியை ஆதரித்து இறுதிக் கட்ட பரப்புரை மேற்கொண்டார்.
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இறுதிக் கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
தேர்தல் பரப்புரை முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும்.தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இறுதி நாளில் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவித பிரச்சாரமும் இல்லை. இப்போது அமைதியான சூழலில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், தமிழ்நாட்டில் பிரச்சாரம் ஓய்வடைந்ததைத் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்த தடை அதைப்போல, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு
