பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு …!விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது....!

11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்

11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்

இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தகுதிநீக்கம் செய்வது சரியாக இருக்காது

தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மேல்முறையீடு

தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

unknown node

அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.

இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் சபாநாயகர் இதுகுறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் தகுதிநீக்கம் செய்வது சரியாக இருக்காது என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தினகரன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க பன்னீர்செல்வம் தரப்பு கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.