சென்னையில் ராட்சச ராட்டினத்தில் சிக்கிய கேரள சிறுமியின் தலை! ஆபரேட்டர் தப்பி ஓட்டம்!

- சென்னை பெசன்ட் நகரில் ராட்சச ராட்டினங்கள் சிறுவர்களுக்காக இயங்கி வருகின்றன.
- அதில் ஒரு ராட்சச ராட்டினத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு சிறுமி ஏறியுள்ளார். அப்போது அச்சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் சிக்கியுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சிறுவர் சிறுமியர் விளையாடும் ராட்சச ராட்டினங்கள் இயங்கி வருகின்றன. இதில் கேரள மாநிலத்தினை சேர்ந்த சல்மா என்கிற சிறுமி அங்குள்ள ஒரு ராட்சச ராட்டினத்தில் எறியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அச்சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் உள்ள கம்பியில் மாட்டிக்கொண்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக சிறுமியை மீட்டனர். இதற்கிடையில் ராட்டின ஆபரேட்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025