சென்னை: பிரபல ரவுடி மணி என்கவுண்டர்..!

விழுப்புரத்தை சார்ந்த ரவுடி மணி என்பவர் மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. சென்னை கோரட்டூரில் மணி இருப்பதாக

விழுப்புரத்தை சார்ந்த ரவுடி மணி என்பவர் மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. சென்னை கோரட்டூரில் மணி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அவரை பிடிக்க விழுப்புரம் போலீஸார் சென்னை சென்றுள்ளனர். அவரை பிடிக்க சென்ற இடத்தில் ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி கத்தியால் தாக்கி உள்ளதாக தெரிகிறது.

இதனால் போலீசார் மணியை துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி மணி  மற்றும் ரவுடி பூபாலன் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை  21 கொலைகள் நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.