சென்னை :சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் 2025, ஹையாட் ரீஜென்சி ஹோட்டலில் நேற்று முன் தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நேற்றைய தினம் தொடங்கவிருந்த இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, ஒரு நாள் தாமதமாக இன்று தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக வலிமையான கிளாசிக்கல் செஸ் போட்டியாகும், இதில் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடர் 9 சுற்றுகளைக் கொண்ட ஒரு ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும், ஒவ்வொரு சுற்றும் மதியம் 3 மணிக்கு தொடங்கும், இறுதி சுற்று ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
மாஸ்டர்ஸ் பிரிவில் ஆர்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, வின்சென்ட் கெய்மர், விடித் குஜ்ராதி, நிஹால் சரின், மற்றும் பிரனவ் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சேலஞ்சர்ஸ் பிரிவில் அபிமன்யு புராணிக், ஹரிகா துரோனாவல்லி, மற்றும் வைஷாலி ரமேஷ்பாபு ஆகியோர் உள்ளனர்.
மொத்த பரிசுத் தொகை ரூ.1 கோடி, மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் பரிசு ரூ.25 லட்சம், சேலஞ்சர்ஸ் பிரிவில் ரூ.7 லட்சம். போட்டியைChessBase Indiaயூடியூப் சேனல் மூலம் நேரலை செய்யப்படும்.
