"வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

நியாயமான தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒருங்கிணைவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

MK Stalin Fair Delimitation

சென்னை :சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில்கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

இன்றைய கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். இது இந்திய கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்கும் ஒரு “மக்களவை இயக்கத்தின் தொடக்கம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள். நியாயமான தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒருங்கிணைவோம்.#FairDelimitation-க்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node