முதலமைச்சர் பழனிசாமி மீது முறைகேடு வழக்கு ...!லஞ்சஒழிப்புத்துறை இயக்குநர் மறுப்பு ...!

முதலமைச்சர் பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என லஞ்சஒழிப்புத்துறை இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

முதலமைச்சர் பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என லஞ்சஒழிப்புத்துறை இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திமுகவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திமுகவின் புகார் மீது முதற்கட்ட விசாரணை எப்போது முடியும்? என லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி  வழக்கு ஜூன் 22-ம் தேதி முதலே திமுகவின் புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்தது.

இதனால் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,833 கோடி மதிப்புக்கு ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்கள், பினாமிக்கு வழங்கியதாக முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தினசரி விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை.திமுக கூறிய 5 டெண்டர்களில் 3 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதில் நெல்லை-செங்கோட்டை -கொல்லம் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பின்னர் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  வரும் 26 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.