விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டார்.. விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை.!

விருதுநகர்: தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து

விருதுநகர்:தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

தேர்தல் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் தான் , வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் கூறுகையில், விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கடிக்கப்படவில்லை. அவர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார்.

தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் மாவட்ட ஆட்சியரே கூறினார். வாக்கு எண்ணிகையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு ஏற்பட்டுள்ளது.3 மணி முதல் 5 மணி வரையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.