அமைச்சர் விஜய்பாஸ்கருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி அளித்தது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று தலைமை கழக அறிவிப்பில் புதிய நிர்வாகிகளை நியமித்து அறிக்கை வெளியிட்டது.அதில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார்.
unknown nodeஅதேபோல் அதிமுக சட்ட அலோசகர் பி.எச் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டனர்.
unknown nodeகடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்நிலையில் இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், “குட்கா விவகாரத்தில் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக அமைச்சர் விஜய்பாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.