தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு நியாயமான காலஅவகாசம் மட்டுமே வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார் .
இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு நியாயமான காலஅவகாசம் மட்டுமே வழங்கவேண்டும் .ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு அவகாசம்கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.