தெருவில் கிடந்த என்னை பேரவைக்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா என பேசியதை கருணாஸ் மறத்து விட்டார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், தெருவில் கிடந்த என்னை பேரவைக்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா என பேசியதை கருணாஸ் மறத்து விட்டார்.கருணாஸ் வரம்பை மீறி பேசுவது தொகுதி மக்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் செய்த துரோகம் .அதேபோல் ஹெச்.ராஜா ஒரு மின்மினி பூச்சி. தன்னை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக பேசுகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.