ஆபாசமாக பேசிய ஹெச்.ராஜா ...!தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.

unknown node

இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால்  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தலைமறைவாகிவிட்டதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.  உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக வழக்கறிஞர்கள்  சி.ராஜசேகர்,காங்கிரசை சார்ந்த சுதா,கனகராஜ் மற்றும் ராஜா முகமது உள்ளிட்டோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முறையிட்டனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை விசாரிக்க மறுத்து மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் முறையிட்டவர்களை போலீசிடம் புகாரளிக்க நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளனர்.முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.