இந்த இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

heavy rain alert

சென்னை :தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவாரூர் மாவட்டங்களில் ஏற்கனவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இன்று 05-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06-12-2025 முதல் 10-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (05-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ஏற்கனவே, நேற்று வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.