சென்னை:வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழை தொடர்பான கூடுதல் விவரத்தை அளிக்கும் வகையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்டாவில் 1ம் தேதி மழை பெய்தால் மற்ற கடலோர பகுதிகளில் மழை பெய்யும். தமிழகத்தின் உள் பகுதிகள், மேற்கு தமிழகம் அனைத்திலும் கனமழை பெய்யும். சென்னையில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும். சென்னையில் கனமழை இருக்காது, ஆனால் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும், டெல்டாவை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும். குறிப்பாக, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் காவிரி படுகை, கொடை மற்றும் குன்னூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு பயணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தொடந்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற வடக்கு உள்பகுதிகளிலும் குறைந்தது 1 நாளுக்கு நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மதுரை, தேனி, தென்காசி விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2-3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.
unknown node