முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்!

In Chennai, the Corona vaccination program has started for people over 80 years of age to go home.

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால், அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கியது. ஒரு மண்டலத்திற்கு ஒரு குழு என 15 மருத்துவ வாகன சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.