வல்லபாய் படேல் சிலையில், தவறாக உள்ள மொழி பெயர்ப்பை மாற்ற வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், வல்லபாய் படேல் சிலையில், தவறாக உள்ள மொழி பெயர்ப்பை மாற்ற வேண்டும்.போக்குவரத்து, சத்துணவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் அதனை தேமுதிக ஆதரிக்கும். போக்குவரத்தை தனியார் துறைகள் லாபகரமாகவும் மிகுந்த பராமரிப்புடனும் நடத்தும் நிலையில் அரசால் நடத்த முடியாதது ஏன் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.