மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இவ்வளவு மழைநீர் தேங்கியிருக்காது – தவெக தலைவர் விஜய்!

மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

tvk vijay

சென்னை :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்தார். “வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பெரும் துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று விஜய் வேதனை தெரிவித்தார். “பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரம், மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று தவெக கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று விஜய் அழைப்பு விடுத்தார். தவெக தொண்டர்கள் ஏற்கனவே பல பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று விஜய் கடுமையாக விமர்சித்தார். “மக்கள் மீது சிறிதேனும் அக்கறை இருந்திருந்தால், கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. இது ஆட்சியாளர்களின் அலட்சியத்தையே காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக் குறைந்தபட்சம் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், மழைநீர் விரைவாக வெளியேறும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார்.

unknown node